மாத விலக்கு நாட்களிலும் மகிழ்ச்சியுடன் உடலுறவு?

கருத்தரிக்க வேண்டாம் என்று நிலை வரும்போது தவிர மற்ற காலங்களில்  , மாத விலக்கு நாட்கள் அவ்வளவு இனிமையானவையாக இருப்பதில்லை. அவை வலியும் வேதனையும் மிக்கவை என்பதை எல்லாப் பெண்களுமே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் மாத விலக்கு நாட்களிலும் பெண்கள் விரும்புகிற ஆனால் வெளிப்படையாகப் பேச விரும்பாத விஷயம் ஒன்று இருக்கவே செய்கிறது. ஆம்! அதுதான் உடலுறவு! உறுப்புகள் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும் சரி-மாத விலக்கு நாட்களில் உடலுறவு கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.

மாதவிலக்கு நாட்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதாகவும் நன்மை தருவதாகவும் இருக்கிறது என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே உங்கள் பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு இருந்தாலும் நீங்கள் ஜாலியாக விஷமம் செய்யலாம்.அதற்கான பத்து காரணங்கள் இதோ !

1.மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் வலியையும் வேதனையையும் குறைக்க உடலுறவு உதவுகிறது. உச்சகட்ட இன்பம் ஏற்படும்போது ஆக்ஸிடாஸின் வெளிப்படுவதால், உங்கள் மன நிலை உச்சகட்டத்தை அடைகிறது; இனிமையான உடலின்பம் கிட்டுகிறது. கனமான ஓர் ஆண்பிள்ளை உங்கள் கருப்பையின்மேல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் மறைந்துபோகிறது!

2.மாதவிலக்கு நாட்களைப் பற்றியும் இரத்தப்போக்கு பற்றியும் நீங்களும் உங்கள் கணவரும் கொண்டுள்ள தவறான புரிதலை சரிசெய்ய , அந்தக் காலத்தில் மேற்கொள்ளும் கலவி உதவுகிறது.

3.மாதவிலக்கு நாட்களில் நீங்கள் செக்ஸியாகத் தோன்றுவதுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலும் அதிகரிக்கிறது. அப்புறம் என்ன? கவலைப்படாமல் ஜமாய்க்க வேண்டியதுதானே!

4.உங்கள் கூட்டாளியின் உடல்  திரவம் உங்களுக்குள் போய்விட்டாலும் கவலையில்லை..ஏனெனில் கருவுறுவதற்கான வாய்ப்பு மிகமிகக்  குறைவு!

5.தனது மாதவிடாய் நாட்களில், சராசரியாக ஒரு பெண் , 30 முதல் 40 மில்லி லிட்டர் வரை இரத்தத்தை இழக்கிறாள்! இதனால்தான் ஒரு மாதத்தில் நமக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாதவிலக்கு நீடிக்கிறது.எனவே இது ஒன்றும் கவலைக்குரிய விஷயம் இல்லை!

6.கூடுதல் லூப்ரிகேஷனுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்! மாதவிடாய் காலத்தில் உங்கள் பெண்ணுறுப்பில் போதுமான அளவு திரவங்கள் சுரப்பதால் கூடுதல் லூப்ரிகேஷன் தேவையில்லை!

7.மாதவிலக்கு நாட்களில் உறவுகொள்ளும்போது பெண்கள் தங்களின் சுட்டித்தனத்தை அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதனால் என்ன ஆகும்? நிறைய ஜாலி...நீண்ட நேரம் ஜாலி..! அதுமட்டும் அல்ல உங்களவருடைய  ஈகோவையும் அது தூண்டுகிறது!

8.எல்லாப் பெண்களும் அதை விரும்புகிறார்கள்! ஆனால் யாரும் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை! யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்...மாதவிலக்கு நாட்களின்போது படுக்கையில் தள்ளப்படுவதை அனைவருமே விரும்புவதாக ஒப்புக்கொள்வார்கள்!

9.சாப்பிடவேண்டும் எனும் ஆர்வம் இக் காலத்தில் அதிகரிக்கும்.அதை விட்டுவிட்டு  படுக்கையில் உங்கள் குறும்புகளைக் கூட்டுங்கள்! 

10.மாத விலக்கு நாட்களில் கலவி வைத்துக்கொள்வதன் மூலம் உங்களுக்கும் உங்கள் கூட்டாளிக்கும் இடையில் உள்ள பந்தம் மேலும் இறுகும். அது மட்டுமா? உங்கள் உடல் உறுப்புகளைப்பற்றி அவர் நன்கு தெரிந்துகொள்வதுடன், அடிக்கடி மாறும் உங்கள் மன நிலைகளையும் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்வார்.!  

 

Translated by Natarajan Sethuraman

loader